நிம்மதி வேண்டுமா...
                              ADDED :1277 days ago 
                            
                          
                           
 கவலை, இயலாமை, பயம், கோபம் என பல உணர்ச்சிகளால் தவிக்கின்றனர். துன்பம் நிறைந்த இந்த வாழ்க்கையை விட்டு சொர்க்கம் சென்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கின்றனர். உண்மையில் இந்த சிந்தனை சரியானதுதானா... இல்லை. இது தவறானது. இறைவன் வகுத்த பாதையில் வாழ்ந்தாலே இங்கும் நிம்மதி கிடைக்கும். அது என்ன பாதை. வாருங்கள் அதில் பயணிப்போம். 
* உறவினர், நண்பர்களுக்கு உதவி செய்யுங்கள். 
* பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுங்கள். 
* தர்மம் செய்வதை கடமையாக்கி கொள்ளுங்கள். 
* வியாபாரம், பணியில் நேர்மையாக இருங்கள். 
* நண்பர்களிடம் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.