தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ண மிஷனின் 125வது ஆண்டு விழா
ADDED :1248 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், ரெங்கநாயகி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நடத்தும் நமது நாட்டு சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழா மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் 125வது ஆண்டு தொடக்க விழா நேற்று (மே 1ம் தேதி) நடைபெற்றது. விழாவில் சுமார் 100 இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்ட சிலம்பாட்டப் போட்டிகள் நமது கிராம மையத்தில் நடைபெற்றன. இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன், தஞ்சாவூர் நகர மேயர் திரு சண். ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.