அட்சய திருதியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :1255 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் அட்சய திருதியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயிலில், பாலசுப்பிரமணியர்,வள்ளி,தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வரதராஜப்பெருமாள் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கிருஷ்ணன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் உட்பட ஏராளமான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.