ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரியில், பிராமண புரோகிதர் அர்ச்சகர் சங்கம் சார்பில், உலக நன்மைக்காக சுயம்வரா பார்வதி பரமேஸ்வர ஹோமம் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, பூர்வாங்க மஹா கணபதி பூஜை, சுத்தி புண்ணயாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சுயம்வரா பார்வதி பரமேஸ்வரர் கும்ப ஸ்தாபனம், வேதிகா அர்ச்சனை, சுயம்வரா பார்வதி பரமேஸ்வரர் ஜபம் மற்றும் ஹோமம் ஆகியவை நடந்தன.
10:30 மணிக்கு அக்னி பிரதிஷ்டை, மஹாசங்கல்பம், கன்னிகாதானம், 11:45 மணிக்கு, மாங்கல்ய தாரணம், வாரணம் ஆயிரம், மஹா மங்கள ஆர்த்தி நடந்தன. சுவாமி திருக்கல்யாணத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் ராமசந்திர ஆச்சார்யலு மற்றும் குழுவினர் நடத்தினர். ஹோமங்களை, பாண்டிச்சேரி ராகவேந்திர குருக்கள், ஆம்பூர் கிருபா பாஸ்கர் குருக்கள் ஆகியோர் நடத்தினர். இதை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர். மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் நகர் வலம் சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.