உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி அம்மன் கோவில் திருவிழா

ஆதிபராசக்தி அம்மன் கோவில் திருவிழா

தளி அருகே நடந்த ஆதிபராசக்திதேவி அம்மன் கோவில் திருவிழாவில், கோழிகளை வாயால் கடித்து பூசாரி பலி கொடுத்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சூடசந்திரத்தில், ஆதிபராசக்தி தேவி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 29ல் துவங்கியது. அம்மனுக்கு கங்கா பூஜை, குருபூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி நேற்று காலை மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அருள் வந்த பூசாரி, அங்கு மண்ணால் அமைத்திருந்த சுவாமி சிலை மீது ஏறி ஆக்ரோஷமாக ஆடினார். தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாயால் கடித்து அதன் ரத்தத்தை குடித்து பலி கொடுத்தார். தொடர்ந்து பக்தர்கள் கிராம தேவதைகளை தோளில் சுமந்தவாறு அக்னி குண்டத்தில் இறங்கினர். சூடசந்திரம் சுற்று வட்டார கிராம மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !