சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயில் திருக்கல்யாணம்
ADDED :1267 days ago
சோழவந்தான்: சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா 15 ஆண்டுகளுக்கு பின் மே 2 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திரவுபதி, அர்ச்சுனன் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன், சுவாமி திருவீதி உலா சென்றனர். நாளை (மே 6) காலை 7:30 மணிக்கு கருப்பட்டியில் பீமன் வேடம், கீசகன் வதம் நடக்கிறது.மே 11 மாலை 5:00 மணிக்கு பூக்குழி விழா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தக்கார் இளமதி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.