உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா : மஹன்யாச ருத்ர பூஜை

ராமேஸ்வரத்தில் சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா : மஹன்யாச ருத்ர பூஜை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா யொட்டி உலக நன்மைக்காக மஹன்யாச ருத்ர பூஜை நடந்தது.

ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா யொட்டி மே 2 முதல் 5 வரை கணபதி ஹோமம், தட்சணாமூர்த்தி ஹோமம், பார்வதி ஹோமம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று உலக நன்மைக்காக 12 வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மஹன்யாச ருத்ர ஜெபம் நடந்தது. மேலும் ஆதிசங்கராச்சாரியார் மற்றும் சங்கராச்சாரியார் திருஉருவ சிலைகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமேஸ்வரம் காஞ்சி மடம் மேலாளர் ஆடிட்டர் சுந்தர், சாச்சா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !