முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம பூஜை
புதுச்சேரி, : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ ,மாணவிகளுக்கு சகஸ்ர நாம பூஜை நடந்தது.
முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பொதுத் தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறுகிறது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக பொதுத் தேர்வு நேரங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 மாணவர்கள் , 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்கியது.அதனையொட்டி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 19ம் ஆண்டு சகஸ்ரநாம அர்ச்சனை காலை 10:30 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, முன் பதிவு செய்து கொண்ட மாணவர்களின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசி ஆகியவற்றை சங்கல்பம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.