சவட்டையன் வலசையில் கும்பாபிஷேக விழா
ADDED :1285 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சவட்டையன் வலசை கிராமத்தில் காந்தாரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த மே 5 அன்று முதல் கால யாகசாலை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹுதி யுடன் துவங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் புனித கலசங்கள் புறப்பாட்டிற்குபின் கற்பகவிநாயகர், கருப்பண்ணசாமி, காந்தாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமானக் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கீழக்கரை ஸ்ரீநகர் மீனாட்சிசுந்தரம் குருக்கள், முருகதாஸ் குருக்கள் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை சவட்டையன் வலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.