உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவிலில் வன போஜனம்

வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவிலில் வன போஜனம்

சூலூர்: வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவிலில், வன போஜன பூஜையை ஒட்டி, திருவீதி உலா நடந்தது.

சூலூர் அடுத்த வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் பழமையானது. இங்கு, 18 சாத்துப் படியும், வன போஜன பூஜையும் நடந்தது. கோவில் வளாகத்தில்  கோ பூஜையுடன் விழா துவங்கியது. சப்பரத்தில் எழுந்தருளிய பெருமாள், மூலிகை வனத்துக்கு அழைத்து செல்லும் புறப்பாடு பூஜை நடந்தது. சகஸ்ராப்தி மண்டபத்தில் பெருமாளுக்கு, தயிர், தேன், பழ  வர்க்கம், பன்னீர், பச்சை கற்பூரம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களின் நாம சங்கீர்த்தனமும், பிருந்தாவனமும்  நடந்தது. தொட்ர்ந்து, பெருமாள் திருவீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !