பெருமாள் சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :1272 days ago
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தெலுங்கு வீதியில் உள்ளது பெருமாள் சுவாமி கோவில். இக்கோவில் பெருமாள் சுவாமிக்கும் துணை பரிவார மூர்த்தியினருக்கும் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் தத்தமங்கலம் பிரம்மஸ்ரீ சங்கரன் நம்பூதிரிபாடின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காலை இவ்விழாவையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கலசத்தில் பூஜை, உப தேவதை கலச பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெற்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.