புளியங்குடி கூத்தபெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் கூத்தபெருமாள் அய்யனார் கோயில் ராஜகோபுரம், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மே 6தேதி காலை 8 மணிக்கு அனுக்ஞை,மகா கணபதி பூஜை, தன பூஜை,நவக்கிரஹ,கணபதி ஹோமம்,பூர்ணாஹூதி,கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம்,முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.மே 7 தேதி இரணடாம், மூன்றாம் கால யாகபூஜை, மந்திர ஸ்தாபனம் நடந்தது.பின்பு நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜை,கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.கருட வாகன புறப்பாட்டுக்கு பின்பு ராஜகோபுரம் மற்றும் விமானக் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.சிவாச்சாரியார் கணேசன் சிவம் குழுக்கள் தலைமையில் நடந்தது.மூலவரான கூத்தபெருமாள் அய்யனாருக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புபூஜைகள் நடந்தது. முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பின்பு பொது அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை புளியங்குடி கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர், கோயில் குடிமக்கள் செய்தனர்.