தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் அன்னையர் தின விழா
ADDED :1276 days ago
தஞ்சாவூர் : சகோதரி நிவேதிதை மகாகவி பாரதியாரின் மானசீக குரு. அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் வழித்தோன்றல்தான் பாரதியார். அடிமைப்பட்டிருந்த ஒரு நாட்டில் ஒரு புரட்சிக் கவிஞருக்கு மனைவியாக இருப்பது மிகவும் கடினம். அதுவும், வறுமை, அவமதிப்பு, புறக்கணிப்பு போன்றவற்றிற்கு நடுவே குடும்பம் நடத்திய செல்லம்மாள் போற்றப்பட வேண்டியவர். அதற்காக சேவாலயா என்ற அமைப்பு பாரதியார்- செல்லம்மாவின் உருவம் தாங்கிய ரதம் ஒன்றை தமிழகமெங்கும் பவனி வரச் செய்கிறது. அந்த ரதம் 07.5.22 அன்று தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்திற்கு விஜயம் செய்தது. செல்லம்மாள் என்ற அந்த அருமையான அன்னைக்கு, அன்னையர் தினத்தில் அவரது புகழ் பாடியதில் அனைவரும் இன்புற்றனர்.