உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்

நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் தினமும் காலையிலும் , இரவிலும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இன்று பத்தாம் நாள் விழாவில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !