உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமலை முருகன் கோவிலில் ஒரு மாதத்தில் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்

முத்துமலை முருகன் கோவிலில் ஒரு மாதத்தில் 15 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சேலம்: சேலம் முத்துமலை முருகன் கோவிலில், கடந்த, ஒரு மாதத்தில், 15 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் கும்பாபிேஷகம், ஏப்.,6ல் நடந்தது. அன்றைய தினத்தில் மட்டும், 1.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற் கொண்டனர். தொடர்ந்து, ஏப்.,7ல், 75,000 ஏப்.,6ல் 50,000 பக்தர்கள் தரிசித்த நிலையில், சித்திரை பிறப்பு தினமான ஏப்.,14ல், லட்சம் பக்தர்களும், ஏப்.,16 சித்திரா பெளர்ணமி நாளில், 75,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முத்துமலை முருகன் சிலை மலேசியாவின் முருகன் சிலை உயரமான, 140 அடியை தாண்டி, 146 அடியாக உள்ளதால், சேலம் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தற்போது, வெளி மாநில, வெளிமாவட்ட பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. மதம் சார்ந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மேற் கொண்டு வரும் கணக்கெடுப்பில், தினமும் முத்துமலை முருகனை, 750 முதல், 1,000 பக்தர்களும், விடுமுறை தினங்களில், 1,200 முதல், 1,500 பக்தர்கள், விசேஷ நாட்களில், குறைந்த பட்சம், 5,000 முதல், 50,000 பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அது மட்டுமின்றி, கடந்த ஏப்.,6 துவங்கி மே 6 வரையிலான, 30 நாட்களில், முத்துமலை முருகனை, 15 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. வரும் ஜூன்,12 வைகாசி விசாக நாளில், லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !