உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா

பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.

மே 3 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் தொடர்ந்து 11 நாட்கள் ஒவ்வொரு நாளும் இரவு, அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நேற்று நடந்த பொங்கல் திருவிழாவில் கோயிலில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை , சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கயர் குத்து திருவிழா, மே 13ல்  தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !