கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :1285 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ஜீவா நகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா ஒரு வாரம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம், பூஜைகள். பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகுகுத்தியும், பறவைகாவடி எடுத்தும் தீ மிதித்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.