பழநி முருகன் கோயிலில் சிங்கப்பூர் அமைச்சர் சுவாமி தரிசனம்
ADDED :1285 days ago
பழநி: பழநி மலைக் கோயிலில் தரிசனத்திற்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதர் சண்முகம் சுவாமி தரிசனம் செய்தார். பழநி முருகன் கோயிலுக்கு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் காசிவிஸ்வநாதர் சண்முகம் வந்தார். ஹெலிகாப்டரில் பழநி வந்த அவரை தகுந்த பாதுகாப்புடன் ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்று உச்சிகால பூஜையில் கலந்து கொண்டார் அவருடன் டிவிஎஸ் குழும சுதர்சனம் பூஜையில் கலந்துகொண்டார். இவர் பழநி கோயிலுக்கு மூன்று சக்கர சரக்கு வாகனத்தை காணிக்கையாக செலுத்தினார்.