ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1285 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் பணமாகவும் தங்கம் மற்றும் வெள்ளி ஆக செலுத்துகின்றனர் . அதனை மாதத்திற்கு இரண்டு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு மூன்று முறை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்களால் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை இன்று 10.5.22 அன்று செவ்வாய்க்கிழமை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்களால் கணக்கிடப்பட்டதில் பணமாக ; 1,22,95,525ரூ, கோ ஸம்ரக்ஷனா ;2,80,050, தங்கம் ; 355.800 கிராம், வெள்ளி ; 347 கிலோ மற்றும் வெளிநாட்டுப் பணம் 100 வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரிவித்துள்ளார்.