சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி விழா
ADDED :1285 days ago
சோழவந்தான்: சோழவந்தான் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா மே 2 கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 4 திரவுபதி, அர்ச்சுனனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பீமன் வேடம் கீசகன் வதம், அர்ச்சுனன் தபசு, அரவான் உருவம் திறப்பு நடந்தது. பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்தனர். நேற்று மாலை பூக்குழி விழா நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் இளமதி மற்றும் விழா குழுவினர் செய்கின்றனர்.