கல்யாண நட்சத்திரம்
ADDED :1264 days ago
திருமணம் நடத்த உயர்ந்த நட்சத்திரம் சுவாதி என்கிறது யஜுர் வேதம். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான இதில் திருமணம் நடத்தினால் கணவர், மனைவி இடையே கோபம் உண்டாகாது. புகுந்த வீடு, பிறந்த வீட்டிற்கு மனைவி பெருமை சேர்ப்பாள். பிறந்த வீட்டைப் போலவே புகுந்த வீட்டிலும் சந்தோஷமாக இருப்பாள். அவள் கண்களில் துாசி விழுந்தால் ஒழிய கண்ணீர் வர காரணம் இருக்காது.