திருவண்ணாமலையில் வைகாசி பவுர்ணமி : லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ADDED :1257 days ago
திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை தரிசித்து வழிபடுகின்றனர். வைகாசி மாத பவுர்ணமி திதி நேற்று மதியம், 12:19 மணி முதல், இன்று காலை, 10:22 வரை உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று குவிந்தனர். 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வழிபட்டனர். இதையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டது. இரண்டு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வசந்த உற்சவ விழாவில், நிறைவாக மன்மத தகனம் நடந்தது.