பழநி பெருமாள் கோயில்களில் நரசிம்மர் ஜெயந்தி விழா
ADDED :1257 days ago
பழநி: பழநி பெருமாள் கோயில்களில் நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பழநி ராமநாத நகரில் உள்ள காரியசித்தி லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு யாகம், பூஜைகள், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பழநி, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலிலும், பாலசமுத்திரம், அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.