உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

பாலவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே பூசாரிபட்டி பால விநாயகர், சுப்பையா சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி மே 14 ம் தேதி மாலை 5:00 மணிக்கு திருமுறை பாராயணம், கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து புனித நீர் கலசங்கள் கோயில் விமானங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. காலை 10:30 மணிக்கு பாலவிநாயகர், சுப்பையா சுவாமி, அம்மன் கோயில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !