ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1611 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பரமக்குடி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே ஐயப்பன் கோயிலில் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் வைகாசி மாத முதல் தேதி முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. குருநாதர் திருமால், துணை குருநாதர் கிருஷ்ணன் தலைமை வகித்தனர். கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு பூஜை நடந்தது. பின்பு ஐயப்பனுக்கு சிறப்புஅபிஷேகம், படி பூஜை, பஜனை பாடல்கள் பாடினார். சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.பூஜையில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.