லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி
ADDED :1610 days ago
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வளவனுாரில் உள்ள வேதவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி பூஜைகள் நடந்தது.விழாவை யொட்டி, நேற்று காலை 9.00 மணிக்கு, சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், லட்சுமி நரசிம்மர் ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ பெருமானுக்கும், மூலவர் யோக நரசிம்மருக்கும் சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.பின், லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், வேதவல்லி தாயாரோடு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் யோக நரசிம்மருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை ஆராவமுதன் பட்டாச்சாரியார் மற்றும் இப்பகுதி கிராம மக்கள் செய்திருந்தனர்.