உலக நன்மைக்காக 121 முறை மகா ருத்ர ஜெபம்
ADDED :1495 days ago
மேட்டுப்பாளையம்: உலக நன்மைக்காக, மேட்டுப்பாளையம் ராஐ கணபதி கோவிலில், 121 முறை மகா ருத்ர ஜெபமும், 11 முறை ஹோமமும் நடந்தது.
மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் ராஜகணபதி கோவில் உள்ளது. இங்குள்ள கைலாசநாதருக்கு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ஏகாதச ருத்ர ஹோமமும், 121 முறை மகா ருத்ர ஜெபமும், 11 முறை ஹோமமும் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த இந்த ஹோமத்தில் பாஸ்கர் சிவாச்சாரியார் தலைமையில், 11 சிவாச்சாரியார்கள் யாக வேள்வி பூஜையை நடத்தினர். முடிவில் கைலாசநாதருக்கும் சிறப்பு அலங்காரம் பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.