உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்

நல்ல முத்துமாரியம்மன் கோவில் திருவிழா : பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்

காரைக்குடி: காரைக்குடி நாற்சுழியேந்தல் நல்ல முத்து மாரியம்மன் கோயில் சித்திரை வைகாசி திருவிழாலை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி நார்ச்சுழியேந்தல் பகுதியில் உள்ள அண்ணாமலைபிள்ளையார், முனீஸ்வரர், நல்ல முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை வைகாசி திருவிழா கடந்த 8 நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நினைந்தவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய திருவிழாவான பக்தர்கள் கீழ ஊரணி பிள்ளையார் கோயிலிலிருந்து நல்ல முத்து மாரியம்மன் கோயிலுக்கு பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !