பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1298 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா 3 நாட்கள் நடந்தது. மே 15 சாமியாடிகள், பொதுமக்கள் அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். மே 16 பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 17 காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.