தென்கரை உச்சி மாகாளியம்மன் கோயிலில் பூப்பல்லக்கு
ADDED :1248 days ago
சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை உச்சி மாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். மே 10ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் அம்மன் வீதிஉலா நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் மே 18ல் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர், இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்தனர், பூப்பல்லக்கு நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.