உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைராமன் கோயில் கும்பாபிஷேகம்

மலைராமன் கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது மலைராமன் கோயில். கிராம மக்கள் சார்பில் புணரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனிதநீரை கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருவறையில் உள்ள மலைராமன் சிலைக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடத்தினர். . மதுரை, தேனி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !