நாகர் கும்பாபிஷேகம்
ADDED :1315 days ago
தேவகோட்டை: தேவகோட்டை நித்தியகல்யாணி புரத்தில் உள்ள சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் நேற்று நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக இரண்டு கால யாக பூஜை செய்யப்பட்டு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைத்து சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் நிர்வாகிகள் நவநீதகிரி குருக்கள், ரமேஷ் குருக்கள் ஏற்பாடுகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் அபிஷேகம் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.