உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் பால்குட திருவிழாவிற்கு தயாராகும் கோயில் மண்டபம்

குன்றத்தில் பால்குட திருவிழாவிற்கு தயாராகும் கோயில் மண்டபம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக பால்குட திருவிழாவிற்காக விசாக கொறடு மண்டபத்தில் தூய்மை பணி நடக்கிறது.

கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 12ல் நடக்கிறது. அன்று சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், காலையில் புறப்பாடாகி விசாக கொண்டு மண்டபத்தில் எழுந்தருள்வர். காலை முதல் மதியம் வரை மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தலையில் பால் குடங்களை சுமந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். திருவிழாவிற்காக விசாக கொறடு மண்டபத்தில் தூய்மைப் பணி துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !