மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1304 days ago
மேட்டுப்பாளையம்: மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில், 17ம் ஆண்டு விழா நடந்தது.
காரமடை அடுத்து மருதூரில், பழமை வாய்ந்த ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை அன்று, சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று, 17ம் ஆண்டு விழா மற்றும் வைகாசி முதல் சனிக்கிழமை விழா ஆகியவை நடந்தது. இதையடுத்து மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ராவணன் சபையில் வீற்றிருந்த வீர ஆஞ்சநேயரை போன்று, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை சுற்றுவட்டார பகுதியில் உள்ள, பஜனைக் குழுவினர் பஜனை பாடினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.