ஊட்டி மாரியம்மன் கோவிலில் வரும் 5ம் தேதி சங்கடஹரசதுர்த்தி விழா
ADDED :4911 days ago
ஊட்டி : ஊட்டி மாரியம்மன் கோவிலில் வரும் 5ம் தேதி மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது. ஊட்டி மாரியம்மன் கோவிலில், நீலமலை தெய்வீக நற்பணி மன்றம் சார்பில், மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடத்தப்படுகிறது.
வரும் 5ம் தேதி நடக்கும் சங்கடஹர சதுர்த்தி விழாவில், மாலை 3.00 மணிக்கு கணபதி யாகம், மாலை 6.00 மணிக்கு சிறப்பு பஜனைகளுடன் கருவறை, மூர்த்திக்கு 18 விதமான அபிஷேகங்கள், 6.30 மணிக்கு செல்வ கணபதி அலங்காரம், இரவு 7.00 மணிக்கு அர்ச்சனை, விக்னேஸ்வர பூஜை, மகா தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு பிரசாத வினியோகம் நடக்கிறது.