நீங்களும் வெற்றியாளரே!
ADDED :1254 days ago
ஓட்டப்பந்தயம் ஒன்றில் பலர் ஓடிக் கொண்டிருந்தனர். ஒருவர் முதல் பரிசை தட்டிச்சென்றார்.
‘‘அனுபவம் வாய்ந்தவர்கள் பலர் ஓடியும், நீங்கள் எப்படி முதலிடம் பெற்றீர்கள்’’ என சிலர் கேட்டனர்.
‘‘நான் பத்தாவது முறையாக வாங்குகிறேன்’’ என்றார் வெற்றியாளர்.
இதைக்கேட்டவர்கள் குழம்பினர்.
‘‘என்னடா.. போட்டியே இப்போதுதானே நடக்கிறது. இவர் இப்படி பிதற்றுகிறார் என்றுதானே நினைக்கிறீர்கள்.. நீங்கள் பார்த்தது ஒரு போட்டிதான். ஆனால் என் மனதிற்குள் பல போட்டிகள் நடந்துள்ளன. அதில் கிடைத்த அனுபவத்தில்தான் இப்போது வெற்றி பெற்றுள்ளேன்’’ என்றார்.
இவரைப்போல் நாமும் இருந்தால் வெற்றி பெறலாம். எப்படி? ஒரு செயலில் இறங்கும் முன், அதற்கான ஏற்பாடுகள் மனதில் ஓட வேண்டும். பிறகு அதற்கு செயல்வடிவம் கொடுத்தால் நீங்களும் வெற்றியாளர்தான்.