காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி
ADDED :1431 days ago
சாயல்குடி:மாரியூரில் பூவேந்தியநா தர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயில் உள்ளது. தனி சன்னதியாகவீற்றிருக்கும் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
மூலவருக்கு மகா அபிஷேகமும், யாகசாலை பூஜை புறப்பாடு, கும்ப மரியாதை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சமஸ்தான நிர்வாகத்தினர், மகாசபை பிரதோஷ அன்னதானக் கமிட்டியினர் செய்திருந்தனர். * உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள சேத்திரகால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வெற்றிலை மாலை சாத்தப்பட்டது.