உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை : வைபரவருக்கு 18 வகை அபிஷேகம்

சிவபுரிபட்டியில் வடுகபைரவர் பூஜை : வைபரவருக்கு 18 வகை அபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மஷம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு யாக பூஜையுடன், 6 அடி உயர வடுக வைபரவருக்கு 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு தன்னாயிரம் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்திவைத்தார். பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்தி வைத்தார். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள கால பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !