அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்
ADDED :1274 days ago
வாடிப்பட்டி: சமயநல்லூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா மே 15 துவங்கியது. அம்மன், உற்ஸவ அம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடுகள் நடந்தன. சாமியாடிகள் வைகை ஆற்றிலிருந்து கோயிலுக்கு சக்தி கரகம் எடுத்து வந்தனர். அம்மன் சிறப்பு அலங்கார நகர்வலம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.