உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லாண்டியம்மன் கோவில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

செல்லாண்டியம்மன் கோவில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுாரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. கிராம பொதுமக்கள் மருதுார் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் யாக சாலையில் பூஜை செய்தனர். பின், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இந்தாண்டு விழாவில் கிராம பொது மக்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !