வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1563 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில், சோழீஸ்வரர் திருக்கோவில் நேற்று நந்திஸ்வரர் எம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தியெம் பெருமானுக்கு 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. ஒரே நேரத்தில் சிவனுக்கும் நந்தியம் பெருமானுக்கும் மஹாதீபாராதனை நடந்தது. பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.