உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் துாய்மை பணி

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் துாய்மை பணி

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மலைப்பாதையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சங்கராகல்லுாரி மாணவர்கள் நேற்று துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில், மலைப்பாதை , படிக்கட்டு பாதை, மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் உள்ள குப்பையை அகற்றினர். சுமார், 500 கிலோ எடையுள்ள குப்பை அகற்றப்பட்டு, சோமை யம்பாளையம் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியில், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் என, 70 பேர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !