ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை பூஜை
ADDED :1433 days ago
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே அய்யாபட்டியில் உள்ள சிவ தாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் அம்மாவாசை பூஜை நடந்தது. பால்,பழம் ,பன்னீர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக்கொண்டு ருத்ர லிங்கேஸ்வரர்க்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.