உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி சனி: பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி சனி: பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அனுமனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !