திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :1601 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) சிறப்பு மஹா அபிஷேகத்தில், ஆயிரத்து எட்டு லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. அமாவாசையை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) நடந்த சிறப்பு மஹா அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.