ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
                              ADDED :1249 days ago 
                            
                          
                           ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று (30ம் தேதி), இந்த மாதத்துக்கான சர்வ அமாவாசையை முன்னிட்டு, பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் வசதிக்காக பல மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.