உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நிறைவு

திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திம்மசமுத்திரம் திரவுபதியம்மன் கோவில், மஹாபாரத அக்னி வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் கிராமத்தில் பழமையான திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மஹாபாரத அக்னி வசந்த திருவிழா கடந்த மாதம், 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி 21ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு, மஹாபாரத கட்டை கூத்து நாடகம் நடந்தது. இதில், முக்கிய நிகழ்வான, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி மே 29ல் காலை 8:00 மணிக்கு நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது.நேற்று முன்தினம், தருமர் பட்டாபிேஷகம் சொற்பொழிவுடன், அக்னி வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !