உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை சுற்றுச்சுவர் சீரமைப்பு

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை சுற்றுச்சுவர் சீரமைப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையின் கிழக்குப் பகுதியில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் சேதம் அடைந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பகுதியை இடிந்தது. சரவணப் பொய்கைக்கு குளிக்க வருபவர்கள் அப் பகுதியை தாண்டி மலையின் அடிவாரப் பகுதியில் காலியாக உள்ள இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். அப்பகுதியிலுள்ள மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து கிடந்தன அவற்றில் சில தினங்களுக்கு முன்பு சிலர் தீ வைத்தனர். அந்த சுற்றுச்சுவர் கோயில் நிதி ரூ. 6.80 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !