பாதூர் ஸ்ரீ ரேணுகாம்பிகை கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :1272 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ ரேணுகாம்பிகை கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ ரேணுகாம்பிகை கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இதனையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பின்னர் தினசரி இரவு சுவாமி வீதி உலாவுடன் தீபாரதனை வழிபாட்டுடன் நடந்து வந்தது. நேற்று மதியம் ஒரு மணி அளவில் கூழ் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக வந்து கோவிலில் சுவாமிக்கு வைத்து பூஜை செய்து வழிபட்டு சாகை வாரத்தால் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். நேற்று இரவு சுவாமி வீதிஉலா நடந்தது.