கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் திருமஞ்சன வைபவம்
ADDED :1272 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சன வைபவம் நடந்தது. திருப்பதியின் ஏற்றம் கொண்ட கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதத்தையொட்டி, நாள்தோறும் சிறப்பு வைபவங்கள் நடக்கிறது.நேற்று முன்தினம் உற்சவ சுவாமிகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார திருமஞ்சனம், பகவத் சங்கல்பத்துடன், சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.